உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெகிழி இல்லா தர்மபுரிவிழிப்புணர்வு பேரணி

நெகிழி இல்லா தர்மபுரிவிழிப்புணர்வு பேரணி

தர்மபுரி:தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், 'மஞ்சப்பை' பயன்படுத்துவது மற்றும் 'நெகிழி இல்லா தர்மபுரி' குறித்து, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் 'மஞ்சப்பை'களை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெகிழி இல்லா தர்மபுரி குறித்த, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, டவுன் பஸ் ஸ்டாண்டில், 1.85 லட்சம் ரூபாய் மதிப்பில், 'மஞ்சப்பை' வழங்கும் தானியங்கி இயந்திரத்தை திறந்து வைத்தார். இதில், 10 ரூபாய்- செலுத்தி ஒரு, 'மஞ்சப்பை' பெற்று கொள்ள முடியும்.இதில், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, கமிஷனர் சேகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயகுமார், நகர் நல அலுவலர் லட்ஷிய வர்ணா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ