பிளஸ் 2 மாணவர் மாயம்
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகன் கமலேஷ், 17, இவர், புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை என்றும், தலைமுடியை திருத்தம் செய்ய சொல்லியும் கமலேஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் சென்ற கமலேஷ் வீடு திரும்பவில்லை. புகார் படி, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.