உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / துணை மின்நிலையத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆய்வு

துணை மின்நிலையத்தில் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஆய்வு

பென்னாகரம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, ஒரு வாரமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பென்னாகரம் துணை மின் நிலையத்தில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டார்.பென்னாகரம் துணை மின்நிலையத்தில் அடுத்தடுத்து, 2 டிரான்ஸ்பார்மர்கள் பழுதால், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. 2 டிாரன்ஸ்பார்மர்கள் பழுதால், இப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். துணை மின் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, பென்னாகரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வித்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை