உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட நோட்டீஸ் வழங்கிய போலீசார்

சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட நோட்டீஸ் வழங்கிய போலீசார்

ஒகேனக்கல், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிப்பது, தடை செய்யப்பட்ட பகுதிகள் குறித்து, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இவர்கள் ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்ட காவிரியாற்று பகுதிகளில் குளித்து, தண்ணீரில் மூழ்கி பலியாகின்றனர். கடந்த, ஒரு மாதத்தில் மட்டும், ஏழுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல் போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், கூட்டம் அதிகரிப்பின் போது ட்ரோன் மூலம் கண்காணித்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று, ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கும் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் ஆபத்தான தடை செய்யப்பட்ட ஆலம்பாடி, ராணிப்பேட்டை, ஊட்டமலை பரிசல் துறை, உள்ளிட்ட இடங்களை பதிவிட்டு அங்கு குளிக்க கூடாது மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வுநோட்டீஸ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி