மேலும் செய்திகள்
காவிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து பாறை ஓவியம்
21 hour(s) ago
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுகோள்
26-Oct-2025
குருவம்பட்டியில் மின் கம்பங்கள் அமைப்பு
26-Oct-2025
புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள்
25-Oct-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வத்தல்மலையில், சுற்றுலாத்துறையின் சார்பில், சுற்றுலா பொங்கல் விழா தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. கலெக்டர் சாந்தி வத்தல்மலை பொதுமக்களுடன் இணைந்து, பொங்கல் வைத்து கொண்டாடினார்.மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம், பி.டி.ஓ., சத்யா, அனந்தராம விஜயரங்கன், கொண்டகரஅள்ளி பஞ்., தலைவர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.* பாலக்கோடு பேரூராட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இதாயத்துல்லா முன்னிலை வகித்தார். தொடர்ந்து பேரூராட்சி வளாகத்தில் செங்கரும்பு, மஞ்சள் வைத்து, வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டது. பின், பானையில் பொங்கல் வைத்து சூரியனை வணங்கி நன்றி தெரிவித்தனர். துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், வார்டு கவுன்சிலர்கள் சரவணன், மோகன், ஜெயந்தி அலுவலக பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவலக வளாகத்தில்,பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது.* அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் இந்திராணி துவக்கி வைத்தார். வார்டு கவுன்சிலர்கள், துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
21 hour(s) ago
26-Oct-2025
26-Oct-2025
25-Oct-2025