உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஐப்பசி சஷ்டியையொட்டி முருகன் கோவிலில் பூஜை

ஐப்பசி சஷ்டியையொட்டி முருகன் கோவிலில் பூஜை

ஐப்பசி சஷ்டியையொட்டிமுருகன் கோவிலில் பூஜைதர்மபுரி, அக். 23-தர்மபுரி அடுத்த, சந்தனுார் பாலமுருகன் கோவிலில், நேற்று ஐப்பசி மாத சஷ்டியையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், எஸ்.வி.ரோடு முருகன்கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிசுவாமி கோவில், லளிகம் சுப்ரமணியசுவாமி கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில், சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை