முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 43 மையங்களில் தேர்வு
தர்மபுரி: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, தர்மபுரி மாவட்டத்தில், 43 மையங்களில் தேர்வுகள் நடப்பது குறித்து, மாவட்ட சி.இ.ஓ., ஜோதிசந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முது-கலை பட்டதாரி ஆசிரியர் (பி.ஜி., டி.ஆர்.பி) தேர்வு இன்று நடக்-கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 43 மையங்களில், 11,961 பேர் தேர்வுகள் தேர்வெழுத உள்ளனர். காலை, 8:30 முதல், 9:30 மணி வரை தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப் படுவர். காலை, 10:00 முதல், 1:30 மணி வரை தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுகள் சார்ந்து, தேர்வு மைய வழித்தடங்கள் குறித்து, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தர்மபுரி சம்பத்குமார், நல்லம்-பள்ளி ராஜசேகர், பாலக்கோடு பாபுசுந்தரம், அரூர் ஆறுமுகம், பாப்பிரெட்டிப்பட்டி கலைவாணன், பென்னாகரம் பாலாஜி, காரி-மங்கலம் நாகையா ஆகிய மையத்தை சேர்ந்த தலைமையாசிரியர்-களை தொடர்பு கொண்டு அறியலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.