உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாநில கோ-கோ போட்டிக்கு செல்லும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநில கோ-கோ போட்டிக்கு செல்லும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை :கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு, பாராட்டு விழா நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சக்திவேல், யசோதா, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் கிருஷ்ணகிரியில் நடந்த கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று, கோவையில் நடக்கும் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கசன்கான், பிரதிஷ், ஆதவன், நிவாஷ், கைலாஷ், மணிகண்டன், ஜித்திஷ், தர்சன், சந்தோஷ், ராமு, ரிசிகாந்த், நவித் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மேகநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை