முதல்வர் ஸ்டாலினை கண்டித்து மறியல்: பா.ம.க.,வினர் கைது
கரூர், நவ. 27-கரூரில், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட, பா.ம.க., வினரை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் நேற்று முன்தினம், அதானி சந்திப்பு குறித்து, பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, ராமதாஸூக்கு வேலை இல்லை என, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அதை கண்டித்து, பா.ம.க.,வினர், நேற்று மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, பா.ம.க., மாவட்ட செயலர் பாஸ்கரன் தலைமையில், அக்கட்சியினர் நேற்று முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பா.ம.க., நிர்வாகிகளை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.