உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: பாலக்கோட்டில் இயங்கி வரும், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்-டித்து, சர்க்கரை ஆலை முன், மா.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட குழு தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள கரும்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு தலைமை அலுவலரின் செயலற்ற நடவடிக்-கையால், ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையில் தினசரி, 2,000 மெ.டன் கரும்பு அரவை செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். சி.எல்.ஆர்., தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ