உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

ஓசூர், ஓசூர் கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 900 மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள், சீருடைகளை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் வழங்கினர். முன்னதாக, எம்.எல்.ஏ., பிரகாஷ் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !