மேலும் செய்திகள்
பள்ளி கல்வி இடைநிற்றல்: 4 சிறுவர் மீட்பு
03-Sep-2024
தர்மபுரி: உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில், தர்மபுரியில் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்ற ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இணை செயலாளர் ஞானப்பழம் முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்டத்தில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, ரஜினி ரசிகர் மன்றம் பரிந்துரை படி, ரசிகர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க, ரஜினிகாந்த் பவுன்டேசன் மூலம், கல்வி உதவி தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி உதவித்தொகை பெற்ற, 3 மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், துணை செயலாளர்கள் சங்கர், வைகுந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Sep-2024