உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொதுமக்கள் குறைதீர் முகாம்

பொதுமக்கள் குறைதீர் முகாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த, புதிய மனுக்கள் மீதான குறைதீர் முகாம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் நடந்தது. இந்நிலையில், மார்ச், 16 லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு பின், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக, பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் குறைதீர் முகாம் நடந்தது. இதில், 97 மனுக்கள் பெறப்பட்டு, 95 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தார். இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், டி.எஸ்.பி., சிவராமன், இன்ஸ்பெக்டர்கள் யமுனாதேவி, அன்பழகன், எஸ்.ஐ., இளமதி, பரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ