உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இருளில் ரயில்வே மேம்பாலம்;நடமாட மக்கள் அச்சம்

இருளில் ரயில்வே மேம்பாலம்;நடமாட மக்கள் அச்சம்

மொரப்பூர்:மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில், மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில், சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் வழியாக, தர்மபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளுக்கு, தினமும், பஸ், லாரி உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேம்பாலத்தில் உள்ள, பெரும்பாலான கம்பங்களில் மின்விளக்குகள் இல்லாமலும், பழுதாலும் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில், விளக்கு வெளிச்சமின்றி இருட்டாக உள்ளதால், விபத்துக்கள் நடக்கின்றன. மேலும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன. இதனால், இரவு நேரங்களில், அவ்வழியாக, செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, ரயில்வே மேம்பாலத்தில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரிசெய்ய, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை