உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி மாவட்டத்தில் மழை

தர்மபுரி மாவட்டத்தில் மழை

தர்மபுரி: தமிழகத்தில், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி நகர பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை முதல், தர்மபுரி மாவட்டத்தில் பல்-வேறு இடங்களில் அவ்வப்போது, விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, ஒகே-னக்கல், 15 மி.மீ., அரூர், 13.40, பாப்பிரெட்டிப்பட்டி, 7.40, நல்-லம்பள்ளி, 3, பென்னாகரம், 2, தர்மபுரி, 1.30 மி.மீ., என சராசரி-யாக மாவட்டத்தில், 5.23 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ