மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
16-Jun-2025
ஒகேனக்கல், ஒகேனக்கல் சாலையோரத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளில் கூத்தப்பாடி ஊராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் சாலையோரத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற, தர்மபுரி கலெக்டர் சதீஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதையெடுத்து, கூத்தப்பாடி ஊராட்சி துாய்மை பணியாளர்கள் சாலையோரத்தில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் கடந்த, 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் மணிவன்ணன் மற்றும் லோகநாதன் பார்வையிட்டனர்.
16-Jun-2025