மயானத்திற்கு இடம் ஒதுக்க கோரிக்கை
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், கோபிசெட்டிபாளையம் பஞ்.,க்கு உட்பட்ட, பாப்பிசெட்டிப்பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை சாலையோரம் அடக்கம் செய்து வருகின்றனர். மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.