உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை

அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை

அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில்சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கைஅரூர், நவ. 15-அரூரில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சென்டர் மீடியன் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கடந்த, 24ல் நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதுடன், தள்ளுவண்டி வியாபாரிகள், வண்டிகளை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் நிலையுள்ளது.எனவே, பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் எளிதாக சென்று வரும் வகையில், வர்ணீஸ்வரர் கோவில் முதல், அம்பேத்கர் நகருக்கு செல்லும் சாலை வரையிலான, சாலையை விரிவாக்கம் செய்து, சென்டர் மீடியன் அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை