உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

அரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க கோரிக்கை

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலை-யத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவ ட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்-ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்-புற பகுதிகளுக்கு இயக்கப்படும், 150க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், ஆயிரக்க-ணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பஸ்-சுக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவியரை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்வதை தடுக்கவும், பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரி-சலை கட்டுப்படுத்தவும், பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்-பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த அக்., 24ல், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். பஸ் ஸ்டாண்ட் திறக்கப்-பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் புறக்காவல் நிலையம் பூட்-டியே கிடக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மொபைல் போன் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் பீதியடைந்துள்-ளனர். எனவே, பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை, பயன்-பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை