உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விதைகளின் முளைப்பு திறனை பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்

விதைகளின் முளைப்பு திறனை பரிசோதித்து விதைக்க வேண்டுகோள்

விதைகளின் முளைப்பு திறனைபரிசோதித்து விதைக்க வேண்டுகோள்தர்மபுரி, நவ. 29-'தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதனை செய்து விதைக்க வேண்டும்' என, விதை பரிசோதனை அலுவலர் கிரிஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரியில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்தில், ஒவ்வொரு பயிருக்கும் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகள் வயலில் நன்கு செழித்து வளரும். இதேபோல், முளைப்புத்திறன் இல்லாத விதைகளால் பயிர் செழித்து வளராமல், பயிர் மகசூல் பாதிக்கப்படும். எனவே, விதைகளின் முளைப்புத்திறனை முறையாக பரிசோதனை செய்து விவசாயிகள், விதையை அவர்களின் வயல்களில் பயிரிட வேண்டும்.விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை விதைக்கும் போது, 50 கிராம் எடை கொண்ட விதை மாதிரி ஒன்றை எடுத்து, அதில் பயிரின் ரகம் மற்றும் தேவைப்படும் பரிசோதனை உள்ளிட்ட விபரங்களை எழுதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள விதை பரிசோதனை நிலையத்துக்கு கொண்டு வந்து, விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதித்து சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு விதை பரிசோதனைக்கும், 80 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை