உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டம் நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டம் நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

ஓசூர், ஓசூர் தொகுதி காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளருமான மனோகரன், டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினர். மேலும், ஓசூரிலுள்ள தளி ரயில்வே கேட் பகுதியில் எந்த மாடலில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற, வரைபடத்தை வழங்கினார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டைக்கு ரயில்பாதை வசதி வேண்டும் என, 30 ஆண்டுகளாக கேட்டும் நிறைவேற்றவில்லை. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கர்நாடகா மாநிலம், பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வழியாக, ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம், இரு மாநில போக்குவரத்து எளிதாகும். தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவர். அதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஓசூரிலுள்ள தளி சாலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்காமல் இழுத்தடிக்கப் படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால், மேம்பாலம் அமைக்கும் பணியை துரித்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ