உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் முறையான ஊதியம் கேட்டு மனு

நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் முறையான ஊதியம் கேட்டு மனு

தர்மபுரி: காரிமங்கலம் அடுத்த கோவிலுார் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலுாரில், 100க்கும் மேற்பட்டோர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 10 மாதங்களாக சிலருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, பஞ்., செயலாளரிடம் கேட்டபோது, நீங்கள் பணி ஓய்வு பெற்றதாக தகவல் வருகிறது. எனவே, உங்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்னும், 6 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது. ஆனால், பஞ்., நிர்வாகம் சார்பில் எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, 10 மாதங்களாக ஊதியம் வழங்காத எங்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை