வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தர்மபுரி, தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல்வார வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் நவ., 7 அன்று வெள்ளிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களை சேர்ந்த, விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்கவுள்ளது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.