சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
பென்னாகரம்: பென்னாகரத்தில் தீபாவாளி பண்டிகையையொட்டி, டூவீலர்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இவர்கள், கூட்ட நெரிசலில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றியும், போக்குவரத்து போலீசார் எடுத்துக்கூறி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்னாகரம் போக்குவரத்து எஸ்.ஐ., சரவணன் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, அனைவரும் கட்டாயமாக லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். மொபைல்போன் பேசிய படி வாகனங்களை ஓட்டக்கூடாது. குழந்தைகளிடம் வாகனங்களை கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தினர்.