மேலும் செய்திகள்
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
01-Jul-2026
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ரங்கன்வலசையை சேர்ந்தவர் சேட்டு, 60, விவசாயி; இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. சேட்டு கடந்த, 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு மந்திகுளாம்பட்டி சென்று விட்டு, மதியம், 2:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், அதிலிருந்த, 1.28 லட்சம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Jul-2026