மேலும் செய்திகள்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்
01-Apr-2026
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை ஜீவானந்தம் தலைமையிலான குழு பூதநத்தம் பகுதியில் நேற்று காலை, 11:53 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பூதநத்தம் பகுதியில் இருந்து அரூர் நோக்கி வந்த பொலீரோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த, பூதநத்தத்தை சேர்ந்த ராஜேஷ், 41, உரிய ஆவணமின்றி, 2.10 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.
01-Apr-2026