காரில் கொண்டு சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்
பென்னாகரம், பென்னாகரம் அருகே வெளி மாநில பதிவெண் கொண்ட காரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற, 3 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுரிசெட்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அய்யாவு தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த, கர்நாடக பதிவு எண் கொண்ட காரை, சோதனை செய்தனர். இதில், மோட்டுப்பட்டியை சேர்ந்த தங்க வேல் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி, 3 லட்ச ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஆறுமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.