உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெள்ளையப்பன் கோவிலில் ரூ.5.10 லட்சம் உண்டியல் வசூல்

வெள்ளையப்பன் கோவிலில் ரூ.5.10 லட்சம் உண்டியல் வசூல்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மஞ்சவாடி கணவாயில், வெள்ளையப்பன் கோவில் அமைந்துள்ளது. தமிழக அரசின், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, சேலம், தர்மபுரி, அரூர், ஆத்துார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் ஞாயிறு, புதன், வெள்ளி உள்ளிட்ட நாட்களில் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல், 4 மாதத்திற்கு, ஒரு முறை திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று, செயல் அலுவலர் சின்னசாமி முன்னிலையில் திறக்க பட்டு, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 30 பேர் ஈடுபட்டனர். மதியம், 12:30க்கு தொடங்கி மாலை, 4:30க்கு எண்ணி முடிக்கப்பட்டது. இதில், 5.10 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !