உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ர அபிஷேகம்

ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ர அபிஷேகம்

தர்மபுரி: தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், 3-வது வார சோமவாரத்தையொட்டி, நேற்று கோவில் வளாகத்தில் ருத்ர அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை, 108 சங்கு பூஜை மற்றும் பூர்த்தி ஹோமம் நடந்தது.அதை தொடர்ந்து, 11 வகையான தீர்த்தங்கள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு, ஆனந்த நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம், உபகார பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்கார சேவை, மஹா தீபாராதனை நடந்தது. சிவனடியார்கள் பங்கேற்ற, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை