உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊரக வளர்ச்சித்துறை சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருவருட்செல்வம், செந்தில் ஆகியோர் வரவேற்றனர். மாநில அமைப்பு செயலாளர் செல்வம் பேசினார்.துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்தி, பஞ்., மூலம் வழங்க வேண்டும். மக்கள் நல பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியமாக, 15,000 ரூபாய் வழங்க வேண்டும். கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம், 10,000 ரூபாய் பஞ்., மூலம் ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். துாய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து, இறந்த பின், 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற்கட்டமாக செப்., 24ல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று, 2ம் கட்டமாக மாநிலம் தழுவிய ஒருநாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி