உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் வெளிநடப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் வெளிநடப்பு போராட்டம்

தர்மபுரி, 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடத்துவதற்கான நிதியை விடுவிக்கக்கோரி, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் தலைமை வகித்தார்.இதில், முகாம் நடக்கும் மையங்களில் இன்டெர்நெட் வசதி ஏற்படுத்தி தர, 18.69 கோடி ரூபாய் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பஞ்., அல்லது ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, நிதி செலவினம் மேற்கொள்ள அரசாணையில் தெரிவித்திருந்த நிலையில், நிதி எந்த ஒன்றியத்திற்கும் விடுவிக்கவில்லை.எனவே, முகாம் நடத்த உரிய கால அவகாசம் வழங்க கோரியும், திருமண மண்டபத்திற்கான வாடகை, பந்தல் அமைத்தல், மைக் செட், மேஜை மற்றும் நாற்காலிகளுக்கான வாடகை, முகாமிற்கு வரும் அலுவலர்களுக்கு உணவு ஏற்பாடு உள்ளிட்ட செலவினங்களுக்கு முறையாக நிதி விடுவிக்க வலியுறுத்தி, நேற்று மாலை, 4:45 மணிக்கு மாநிலம் தழுவிய ஒரு மணிநேர பணி புறக்கணிப்பு மற்றும் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை