உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருட்கள் விற்பனை; கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்பனை; கடைக்கு சீல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானுசுஜாதா ஆலோசனைப்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்-கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் இணைந்து, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.,ரோடு பகுதிகளில் உள்ள பெட்டி கடை, மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நேற்று ஆய்வு செய்தனர். இதில், பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய-வந்தது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்ததுடன் கடைக்கு சீல் வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ