உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / துாய்மை பணியாளர்கள் சங்க கோரிக்கை விளக்க கூட்டம்

துாய்மை பணியாளர்கள் சங்க கோரிக்கை விளக்க கூட்டம்

தர்மபுரி, அக். 27-தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை விளக்க பேரவை கூட்டம், இண்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட தலைவர் மாதம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், செல்வராஜ், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், கடந்த சில நாட்களுக்கு முன், ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர் பொன்னையா தலைமையில், சென்னையில் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்திய படி, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்கு பவர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் என, அனைவருக்கும் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன், மாநில பொதுச்செயலாளர் விஜயபாலன் உட்பட, 500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட னர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வெள்ளையன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை