மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
10-Sep-2024
முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடுதர்மபுரி, அக். 9-தர்மபுரி அடுத்த, சந்தனுார் பாலமுருகன் கோவிலில் நேற்று, புரட்டாசி மாத சஷ்டியையொட்டி சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், எஸ்.வி.,ரோடு, முருகன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிசுவாமி கோவில், லளிகம் சுப்ரமணியசுவாமி கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
10-Sep-2024