உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கலைஞர் கனவு இல்ல திட்ட பணியாணை வழங்க ரூ.-5,000 லஞ்சம் வாங்கிய பஞ்., செயலாளர் கைது

கலைஞர் கனவு இல்ல திட்ட பணியாணை வழங்க ரூ.-5,000 லஞ்சம் வாங்கிய பஞ்., செயலாளர் கைது

தர்மபுரி: கலைஞர் கனவு இல்ல திட்ட பணியாணை பெற, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பஞ்., செயலாளரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், சின்னம்பள்ளி பஞ்., ஜாரண்டபள்ளத்தை சேர்ந்தவர் புரோகிதர் சேஷாத்திரி, 49. இவர், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், வீடு கட்ட பதிவு செய்திருந்தார்.வீடு பெறும் பயனாளிகள் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு, 3.50 லட்சம் ரூபாய் வழங்குவதில், பயனாளிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்ப-டுகிறது. பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்ற சேஷாத்திரி, வீடு கட்ட வேண்டி, சின்னம்பள்ளி பஞ்., செயலாளர் ரஜினிகாந்த், 46, என்-பவரை அணுகினார்.அவர், வீடு கட்ட பணியாணை பெற, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சேஷாத்திரி, தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.அதன்படி போலீசார் கொடுத்தனுப்பிய, ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை, நேற்று காலை தர்மபுரி அடுத்த, எர்ரபட்டியில் சாலையில் நின்றிருந்த, பஞ்., செயலாளர் ரஜினிகாந்திடம், சேஷாத்திரி கொடுத்தார்.அதை ரஜினிகாந்த் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை