ரூ.42 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ரூ.42 லட்சத்துக்கு மாடுகள் விற்பனைஅரூர், நவ. 7- அரூர் அடுத்த புழுதியூர் சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 190 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கலப்பின மாடு ஒன்று, 45,000 முதல், 67,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 7,000 முதல், 34,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 42 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.