மேலும் செய்திகள்
'காலாவதி உணவுப்பொருள் விற்றால் தகவல் கொடுங்கள்'
25-Feb-2025
தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா மேற்பார்வையில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், அருண்குமார், உதவி உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நெய், தேன், பால், டீ துாள் ஆகியவற்றில் கலப்படம் செய்திருப்பதை எளிய முறையில் கண்டறிதல் மற்றும் சோம்பு, பருப்பு, அரிசி, மிளகு ஆகியவற்றில் கலப்படத்தை கண்டறியும் முறை குறித்து விளக்கம் அளித்தனர்.முன்னதாக, புறநகர் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓட்டல், டீக்கடை, பெட்டிக்கடை ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதில், 10 கடைகளில் முகவரி இல்லாத கூல்டிரிங்ஸ், பிரட், முறுக்கு, சிப்ஸ், கடலை, எள் உருண்டை ஆகியவை காலாவதியான நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதில், கடை உரிமையாளர்களுக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, 20 கிலோ காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், உணவு பொருட்களில் காலாவதியானவற்றை விற்ககூடாது என எச்சரித்தனர்.
25-Feb-2025