| ADDED : பிப் 26, 2024 07:13 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, அரூர்- - -சேலம் நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் தொடர் விபத்து நடக்கிறது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் அச்சாலையில் வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரூர் - சேலம் மெயின் ரோட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரி, பஸ், பைக் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருந்து செல்லும்போது வெள்ளையப்பன் கோவில், மஞ்சுவாடி கணவாய் பகுதியில் வேகமாக சென்று விபத்துக்கு உள்ளாகின்றன. சில வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இதனால் உயிரிழப்புகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சேலம் கோட்ட செயற்பொறியாளர் குலோத்தங்கன், தலைமையில், உதவி பொறியாளர் செந்தமிழ் தேவி, கோட்ட பொறியாளர் நடராஜன் ஆகியோர் மேற்பார்வையில், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலை குறுக்கே வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் விபத்து ஏற்படாது வண்ணம் இருக்க, அப்பகுதியில் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்