உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் தொடர் பைக் திருட்டு

கிருஷ்ணகிரி ஜி.ஹெச்.,ல் தொடர் பைக் திருட்டு

கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டம், தகரகுப்பத்தை சேர்ந்தவர் குமார். இவரது உறவினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ள நிலையில், அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியுள்ளார். அவரது டூவீலரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியுள்ளார். நேற்று அதிகாலை அதை காணவில்லை.குமார் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பைக்குகளை மர்மநபர் நோட்டமிட்டு, அதில் ஒன்றை திருடி செல்வது, 'சிசிடிவி' காட்சியில் பதிவானதை கண்டனர்.கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.உள்நோயாளிகளாக இருப்பவர்களை பார்க்க, அவரது உறவினர்களும் வந்து செல்கின்றனர். அவர்கள் நிறுத்தி செல்லும் டூவீலர்கள் அதிகளவில் திருடுபோகின்றன. எனவே, மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட்டு, கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை