மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
11-May-2025
அரூர் :அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டிலுள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் வைகாசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தையொட்டி பூஜை நடந்தது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பலவகை அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
11-May-2025