உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டிய கடைகாரர்களுக்கு அபராதம்

இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டிய கடைகாரர்களுக்கு அபராதம்

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், இண்டூர் பஞ்.,க்குட்பட்ட தர்மபுரி--பென்னாகரம் சாலையின் இருபுறமும் பல்வேறு வணிக நிறுவனங்கள், இறைச்சி கடைகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடைக்காரர்கள் சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், வணிகர்களுக்கும் தொற்று நோய் பரவும் சூழல் உள்ளது.இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, இண்டூர் பஞ்.,ல், சாலையோரம் செயல்பட்டு வந்த ஒன்பது கோழி இறைச்சி கடைகளில், பஞ்., செயலர் கணேசன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து கழிவுகளை சாலையோரம் கொட்டிய ஒன்பது கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை