மேலும் செய்திகள்
கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்
07-Aug-2025
தர்மபுரி, தர்மபுரி அருகே, கடகத்துாரில், 1279ம் ஆண்டில் கட்டபட்ட மீனாட்சியம்மன் உடனாகிய சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முன்னதாக, கடந்த, 15 அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று வினாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம் திருவிளக்கு, புனித நீர், ஆனைந்து, பிள்ளையார், திருமகள், நிலத்தேவர் உள்ளிட்ட வழிபாடுகளும் அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளையிடுதல் காப்பணிதல் உள்ளிட்டவை நடந்தன. அதை தொடர்ந்து, திருக்குடங்களை இடமாக கொண்டு அம்மையப்பர் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல், திருமுறை விண்ணப்பம், அருளார் அமுதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தன. முன்னதாக, கடகத்துார் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில், பெண்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடத்தை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, யாகசாலையில் வைத்து வழிபட்டனர்.
07-Aug-2025