கொலை வழக்கில் துரித செயல்பாடு போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
கொலை வழக்கில் துரித செயல்பாடுபோலீசாருக்கு எஸ்.பி., பாராட்டுதர்மபுரி, அக். 2- இரட்டை கொலை வழக்கில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த, போலீசாரை தர்மபுரி மாவட்ட எஸ்.பி., பாராட்டினார். தர்மபுரி மாவட்டம், தடங்கம் அடுத்த, புதிய சிப்காட் சாலை பகுதியில் கடந்த, 24, அன்று தேனி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 55, அவரது மனைவி பிரேமலதா, 50 ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா மேற்பார்வையில், 2 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தர்மபுரி மற்றும் தேனி மாவட்டத்தில் தேடி வந்தனர். இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ், 31 மற்றும் நண்பர்களான கன்னியாகுமரியை சேர்ந்த அஸ்வின், 21 மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சபரி, 35, பிரவீன்குமார், 33, நந்தகுமார், 27 ஆகியோரை கடந்த, 28 அன்று கைது செய்தனர். தனிப்படையில் சிறப்பாக செயல்பட்ட, எஸ்.ஐ.,க்கள் விஜயசங்கர், விமல்குமார், ராஜேந்திரன், திருஞானசம்பந்தம், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சேகர், மகேந்திரன் உட்பட போலீசாரை மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் நேற்று பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.