உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க சிறப்பு மாநாடு

அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க சிறப்பு மாநாடு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில், தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கருணாநிதியும், தொழிலாளர் நலவாரியங்களும், 25ம் ஆண்டு வெள்ளி விழா மலர் மற்றும் சிறப்பு மாநாடு நடந்தது. இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற, அரூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக கிடைத்த, 40,000 ஓட்டுக்கள் தான் காரணம். மீண்டும், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். எனக்கு ஒதுக்கப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு ஆகிய, 3 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க, அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநாட்டில் அகில இந்திய, தொ.மு.ச., பேரவை செயலாளர் சண்முகம், தலைவர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு, அரூர் நகர செயலாளர் முல்லைரவி, ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை