மேலும் செய்திகள்
'ஆப்சென்ட்' மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிப்பு
12-Feb-2025
பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெறமாணவர்களுக்கு சிறப்பு தேர்வுதர்மபுரி:தமிழக அளவில், கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்மபுரி மாவட்டம், 21 வது இடத்தை பிடித்தது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் பாதிப்பால், மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி கல்வியுடன் கல்வியை நிறுத்தும் நிலை தொடர்கிறது. அதேபோல், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், கல்லுாரி படிப்பை எட்டமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தடுக்க, தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் கொண்டு வர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ., ஜோதிசந்திரா கூறியதாவது:பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தொடர் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் முதல் நாளே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். அவர்கள் அவற்றை படித்து வந்து, மறுநாள் காலை தேர்வு எழுதுவார்கள். உணவு இடைவேலைக்கு பின், மாணவர்கள் படிக்கும் வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்கள் தேர்வு எழுதிய வினாக்களுக்கு போர்டில் விடையை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து மாணவர்கள் தங்களிடம் உள்ள விடைத்தாள்களை அவர்களாகவே திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் விடைத்தாளில் தாங்கள் செய்யும் பிழைகளை எளிதில் கண்டறிந்து அவற்றை எளிதில் திருத்திக் கொள்ளும் நிலை ஏற்படும். குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 30 தொடர் திருப்புதல் தேர்வு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 7 திருப்புதல் தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நடப்பாண்டில் பொதுத்தேர்வு முடிவுகளில், தர்மபுரி மாவட்டம் முதல், 10 இடங்களுக்குள் வர ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
12-Feb-2025