உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆங்கில துறையில்சிறப்பு கருத்தரங்கு

ஆங்கில துறையில்சிறப்பு கருத்தரங்கு

தர்மபுரி:தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் நடராஜன், 'தமிழ் கவிதைகளும் ஆங்கிலக் கவிதைகளும், இரு ஆன்மாக்களின் எதிரொலி' என்ற தலைப்பில் பேசினார். அவரது உரையில், ஆங்கிலத்துறை மாணாக்கர்கள் இலக்கியங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல், இலக்கிய படைப்புகளை படைக்கக்கூடிய திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறினார்.தொடர்ந்து, ஆங்கிலத்துறை தலைவரும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான கோவிந்தராஜ் துவக்க உரையாற்றி நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆங்கில துறை உதவி பேராசிரியை கிருத்திகா வாழ்த்தி பேசினார். முதலாமாண்டு மாணவி மோனிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை