உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கதிரிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆடிப்‍பெருக்கு சிறப்பு வழிபாடு

கதிரிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆடிப்‍பெருக்கு சிறப்பு வழிபாடு

பாப்பிரெட்டிப்பட்டி: ஆடிப்பெருக்கையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி --கோபாலபுரம் சுகர்மில் ரோட்டிலுள்ள கதிரிபுரத்தில், லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவிலுக்கு உட்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இக்கேவில் அறங்காவலர் குழு தலைவர் பழனி தலைமையில், ஊர் தலைவர்கள் காமராஜ், சுதந்திரம், அசோகன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சுப்பிரமணியன் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், சுவாமி அலங்கரிக்கப்பட்டு, பால், நெய், இளநீர், பழம், சந்தனம், உட்பட்ட நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதன் பிறகு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு, ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.இதில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி