உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரூர், அரூர் ஒன்றியம் எம்.தாதம்பட்டியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், நேற்று நடந்தது. இதில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில், பி.டி.ஓ., கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். * பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டிஹள்ளி ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடந்தது. தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், பழனியப்பன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி