உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

பென்னாகரம்:பென்னாகரம் தாலுகா, ஏரியூர் அடுத்த புதுார் சோளப்பாடி கிராமத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகள் சான்று, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்டவை நடந்தது.நிகழ்ச்சிக்கு, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், பென்னாகரம் தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் கனிமொழி, வட்டார மருத்துவ அலுவலர் அருண், பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் கார்த்தி, ஜெயச்சந்திர பாபு, ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !