மா விவசாயிகளின் பிரச்னையை தட்டிக்கழிக்கவே பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்: தினகரன் தகவல்
தர்மபுரி, ''பிரதமருக்கு கடிதம் எழுதியதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது, 'மா' விவசாயிகளின் துயரை துடைப்பதிற்கு பதிலாக, பிரச்னையை தட்டி கழிக்கும் செயலாக உள்ளது,'' என, அ.ம.மு.க.. பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.தர்மபுரியில், அ.ம.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. தர்மபுரியில், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கூலிப்படையால் தாக்குதல், போதை பொருட்கள் பயன்படுத்தும் கலாசாரம் போன்றவற்றால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தினமும் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உள்ளதால், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காததால், 'மா' விவசாயிகள் மரங்களை அழித்து விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' போல், தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது, பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறியுள்ளார். இது 'மா' விவசாயிகளின் துயரை துடைப்பதற்கு பதிலாக, பிரச்னையை தட்டி கழிக்கும் செயலாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டத்தில், ஆட்சி மன்ற குழு தலைவர் முருகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.